/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி மாவட்டத்தில் முக்கிய பணியிடங்களைநிரப்பாமல் புறக்கணிப்பு; மக்கள் வேதனை
/
கி.கிரி மாவட்டத்தில் முக்கிய பணியிடங்களைநிரப்பாமல் புறக்கணிப்பு; மக்கள் வேதனை
கி.கிரி மாவட்டத்தில் முக்கிய பணியிடங்களைநிரப்பாமல் புறக்கணிப்பு; மக்கள் வேதனை
கி.கிரி மாவட்டத்தில் முக்கிய பணியிடங்களைநிரப்பாமல் புறக்கணிப்பு; மக்கள் வேதனை
ADDED : ஏப் 01, 2025 01:32 AM
- கி.கிரி மாவட்டத்தில் முக்கிய பணியிடங்களைநிரப்பாமல் புறக்கணிப்பு; மக்கள் வேதனை
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சூளகிரி, போச்சம்பள்ளி, குருபரப்பள்ளி ஆகிய பகுதிகளில், சிப்காட்டுகள் இயங்கி வருகின்றன. மாவட்டம் முழுவதும் ஆங்காங்கு, கிரானைட், மாங்கூழ் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. டி.வி.எஸ்., அசோக் லேலண்ட், ஓலா, டாடா எலட்ரானிக்ஸ், ஏத்தர் எனர்ஜி உட்பட முன்னணி நிறுவனங்கள் உள்ளன.
சட்டம் ஒழுங்கு கேள்விக்குறிமாவட்டத்தில் பல மாநில மக்கள் பணியாற்றும் நிலையில், சட்டம், ஒழுங்கு அவ்வப்போது கேள்விக்குறியாகி விடுகிறது. அவற்றை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லை. கொலை வழக்குகளை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழக அரசு போதிய போலீசாரை இம்மாவட்டத்திற்கு நியமிக்காமல் உள்ளது. குறிப்பாக, ஹட்கோ, பாகலுார், சிங்காரப்பேட்டை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் பல மாதமாக காலியாக உள்ளது. நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம் ஓராண்டிற்கும் மேலாக நிரப்பப்படவில்லை.
மாநகராட்சியில் பணி பாதிப்புஓசூர் கமிஷனராக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீகாந்த், கடந்த ஜன., மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாற்றப்பட்டு, தற்போது மயிலாடுதுறை கலெக்டராக நியமிக்கப் பட்டுள்ளார். அதனால், ஓசூர் கமிஷனர் பணியிடம், 2 மாதமாக காலியாக உள்ளது. அதை நிரப்பாமல், சேலம் துணை கமிஷனர் பூங்கொடி அருமைக்கண் பொறுப்பு கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் மாற்றப்பட்டு, ஆவடி மாநகராட்சி இணை கமிஷனர் மாரிச்செல்வி பொறுப்பு கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். நிரந்தர கமிஷனர் இல்லாததால், 15 ஆண்டுக்கும் மேலாக, ஓசூர் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் வேலை செய்வதில்லை. பணிகள் பாதித்து வருகிறது.
அரசு அலட்சியம்
மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த மகேஸ்வரி பதவி உயர்வில் சென்ற நிலையில், அப்பொறுப்பிற்கு கடந்த, 6 மாதமாக யாரும் நியமிக்கப்படவில்லை. ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் முனிராஜ், முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பை கவனித்து வருகிறார். மாவட்டத்தில், பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு பாலியல் தொல்லைகள் பள்ளிகளிலேயே நடக்கிறது. இந்நிலையில், விசாரணை நடத்த வேண்டிய முக்கிய பொறுப்பு முதன்மை கல்வி அலுவலருக்கு உள்ளது. அப்படிப்பட்ட பொறுப்பிற்கு கூட, தமிழக அரசு அதிகாரியை நியமிக்காமல் உள்ளது. மொத்தத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை தமிழக அரசு புறக்கணித்து அலட்சியம் காட்டுவதாக, பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

