/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேவிரஹள்ளி தண்டாயுதபாணி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
/
தேவிரஹள்ளி தண்டாயுதபாணி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
தேவிரஹள்ளி தண்டாயுதபாணி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
தேவிரஹள்ளி தண்டாயுதபாணி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
ADDED : ஏப் 02, 2025 01:32 AM
தேவிரஹள்ளி தண்டாயுதபாணி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
கிருஷ்ணகிரி:காவேரிப்பட்டணம் ஒன்றியம், தேவிரஹள்ளி கருமலை குன்றின் மீது அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமிகள் தேவஸ்தான, பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, சுவாமிக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில், தேவிரஹள்ளி, குடிமேனஅள்ளி, வேதகரம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக நகர்வலம் சென்று, தென்பெண்ணை ஆற்றில் கங்கை பூஜை செய்யப்பட்டு மீண்டும் சுவாமி பண்ணந்துார், கள்ளிப்பட்டு, மொள்ளம்பட்டி வழியாக கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, 11 நாட்கள் பங்குனி உத்திர திருவிழா நடக்க உள்ளது. இதில் கிராமிய நாட்டுப்புற நிகழ்ச்சி, தெம்மாங்கு கலைநிகழ்ச்சி, வள்ளி, தெய்வாணை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
இறுதி நாளில், வாணவேடிக்கையுடன் நிகழ்ச்சி நிறைவடைய உள்ளது. ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் கோவில் விழா குழுவினர் செய்துள்ளனர்.