/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணையில் ஏப்., முழுவதும்தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ADDED : ஏப் 02, 2025 01:33 AM
கே.ஆர்.பி., அணையில் ஏப்., முழுவதும்தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து, 2 போக நெற்பயிர் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. 2ம் போக சாகுபடிக்காக திறக்கப்பட்ட நீரை கொண்டு விவசாயிகள் நெற் பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
ஆனால் நெற்பயிரில் கதிர் வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயிரை பாதுகாக்க கே.ஆர்.பி., அணையிலிருந்து ஏப்., மாதம் முழுவதும் நீர் திறக்க, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் ராமகவுண்டர் தலைமையில், பாசன விவசாயிகள் கே.ஆர்.பி., அணை உதவி செயற்பொறியாளர் அறிவொளியை நேற்று சந்தித்து மனு
அளித்தனர்.இது குறித்து ராமகவுண்டர் கூறுகையில், ''2ம் போக நெல் சாகுபடிக்கு கே.ஆர்.பி., அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் வரும், 16ல் நிறுத்தப்பட உள்ளது. ஆனால் தற்போது நெற்பயிர்களில் கதிர் வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடைமடையில் உள்ள பையூர் பகுதிகளில், 100 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால், மேலும், 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்துள்ளோம்,'' என்றார்.