/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சின்ன வெங்காயத்திற்கு நிலையான விலைசாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

ADDED : ஏப் 11, 2025 01:26 AM
சின்ன வெங்காயத்திற்கு நிலையான விலைசாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 150 ஹெக்டேரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகள், பல்வேறு பயிர்களுக்கு இடையில், ஊடுபயிராகவும் சாகுபடி செய்கின்றனர். 4 மாதங்களுக்கு முன்பு, ஒரு கிலோ, 200 ரூபாயை தொட்ட நிலையில், படிப்படியாக விலை குறைந்து தற்போது ஒரு கிலோ, 50 ரூபாய் என விற்கின்றனர். விலை குறைந்தாலும், நிலையான வருமானம் கிடைப்பதால், மாவட்டத்தில் சின்ன வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து வேப்பனஹள்ளி அடுத்த விருப்பசந்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
சின்ன வெங்காயம், தற்போது விலை குறைந்தாலும், நிலையான விலையுடன் விவசாயிகளுக்கு கை கொடுக்கிறது. 65 முதல், 85 நாட்களில் ஒரு ஹெக்டேருக்கு, 15 முதல், 20 டன் வரை மகசூல் கிடைக்கிறது. தற்போது அறுவடை தீவிரமாக உள்ளதால், ஒரு கிலோ சின்ன வெங்காயம் தரத்தை பொறுத்து, 25 முதல், 30 ரூபாய் வரை விலைக்கு வாங்குகின்றனர். அறுவடை முடியும் தருவாயில், கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது. விலை குறையும்போது இருப்பு வைத்து, விற்க சேமிப்பு கிடங்கு வசதி இல்லை. எனவே, வேப்பனஹள்ளியில் சேமிப்பு கிடங்கு அமைத்தால், விலை கட்டுப்படியான நேரத்தில் விற்பனை செய்து, கூடுதல் லாபம் ஈட்டலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.