/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதுச்சேரியில் கொலையான சிறுமிக்கு ஆசிரியர் கூட்டணியினர் அஞ்சலி
/
புதுச்சேரியில் கொலையான சிறுமிக்கு ஆசிரியர் கூட்டணியினர் அஞ்சலி
புதுச்சேரியில் கொலையான சிறுமிக்கு ஆசிரியர் கூட்டணியினர் அஞ்சலி
புதுச்சேரியில் கொலையான சிறுமிக்கு ஆசிரியர் கூட்டணியினர் அஞ்சலி
ADDED : மார் 12, 2024 04:34 AM
கிருஷ்ணகிரி: புதுச்சேரியில், பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி ஆர்த்திக்கு, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், நேற்று மாலை நினைவஞ்சலி செலுத்தும் கூட்டம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடந்தது. வட்டார மகளிர் வலையமைப்பின் தலைவி தவச்செல்வி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், மகளிர் வளையமைப்பு சார்பில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டி, தமிழக முதல்வருக்கு பல்வேறு தீர்மானங்களை அனுப்பியுள்ளனர். அதில், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரணதண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு மாதமும் வாரத்தில் ஒரு பாடவேளையில், பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிப்பது, தவிர்ப்பது குறித்து பாடங்கள் நடத்த வேண்டும்.
பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க தற்காப்பு கலைகளை பள்ளிகளில் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைவரும் எளிதில் பார்க்கக்கூடிய வண்ணம் இருக்கும் ஆபாச இணைய தளங்களை முடக்க வேண்டும். அரசு, விழிப்புணர்வு குறும்படங்களை தயாரித்து வெளியிட வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இருந்தன.
மாவட்ட துணைத்தலைவர் மரிய சாந்தி, வட்டார பொருளாளர் சாதிக் உசேன், மகளிர் வலையமைப்பு செயலாளர் ரெஜிலின் தீப்தி, நகர துணைத்தலைவர் யாரப் பாஷா உள்பட பலர் பங்கேற்றனர்.

