தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாணம்

லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாணம்

லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாணம்


ADDED : மே 21, 2024 10:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2024 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 38வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த, 15ல் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேகம், பிரகார உற்சவமும், 10:00 மணிக்கு, லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாணமும், மாங்கல்யதாரணமும் நடந்தன. திருக்கல்யாணம் முடிந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் நரசிம்மர் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இரவு, கருட வாகனத்தில் நகர்வலமும், இன்று (மே 21) காலை, நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரகார உற்சவமும், இரவு, யானை வாகனத்தில் நகர் வலமும் நடக்க உள்ளன. தொடர்ந்து, குதிரை வாகனம், சந்திரபிரபா வாகனம், புஷ்ப பல்லக்கு, ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடக்க உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us