தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: வியாபாரிகள் வாக்குவாதம்

பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: வியாபாரிகள் வாக்குவாதம்

பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: வியாபாரிகள் வாக்குவாதம்


ADDED : ஜூன் 19, 2024 10:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2024 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர், மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரபாகரன் தலைமையிலான ஊழியர்கள், நகரின் பல்வேறு இடங்களில் நேற்று கடைகளில் சோதனை செய்தனர்.

அப்போது ஒருமுறை பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். குறிப்பாக, ஓசூர் தாலுகா அலுவலக சாலை, உழவர் சந்தை ஆகிய இடங்களில் அதிகளவில் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர்களுக்கு மொத்தம், 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

உழவர் சந்தையில் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தபோது, மாநகராட்சி ஊழியர்களிடம், கடை வியாபாரிகள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us