/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
/
அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 07, 2024 01:42 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரை தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சரவணபவன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முருகன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ காப்பீடு திட்டத்திலுள்ள குறைபாடுகளை களைந்து, காசில்லா மருத்துவத்தை உறுதிபடுத்தி, அவசர சிகிச்சை பெறும் ஓய்வூதியர்களின் மருத்துவச் செலவை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் அனுப்பும் மனுக்களின் நிலையை அறிந்துகொள்ள டிராக்கிங் சிஸ்டம் என்ற வெப்சைடை அறிமுகப்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்
களுக்கு, 7,850 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தேர்தல் கால வாக்குறுதி, 70 வயதினருக்கு, 10 சதம் கூடுதலாக ஓய்வூதியமும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
போக்குவரத்து ஊழியர் ஓய்வு பெற்றவுடன் பணப்பலன் வழங்கவும், 105 மாத அகவிலைப்படியும், மின்சாரத்துறை ஓய்வூதியருக்கு, 5 மாத நிலுவை அகவிலைப்படியும் வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை
எழுப்பினர்.