தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : டிச 22, 2024 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2024 01:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிரானைட் கடத்திய

லாரி பறிமுதல்

தொப்பூர், டிச. 22-

தர்மபுரி மாவட்ட, கனிம வளத்துறை புவியியலாளர் புவனமாணிக்கம் நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூரில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்றபோது, நிற்காமல் சென்றது. அதை துரத்திச் சென்று, சேலம் மாவட்டம், ஜோடுகுளி அருகே மடக்கி பிடித்து சோதனை செய்தார். அதில், கர்நாடக மாநிலத்திலிருந்து, தேனி மாவட்டத்திற்கு கிரானைட் கற்களை கடத்தியது தெரிந்தது. லாரி ஓட்டுனர் தப்பியோடிய நிலையில், கிரானைட் கற்களுடன் லாரியை தொப்பூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us