தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/விளையாட்டு போட்டிகளில் 'சாம்பியன்'அரசு பாலிடெக்னிக் மாணவியருக்கு பாராட்டு

விளையாட்டு போட்டிகளில் 'சாம்பியன்'அரசு பாலிடெக்னிக் மாணவியருக்கு பாராட்டு

விளையாட்டு போட்டிகளில் 'சாம்பியன்'அரசு பாலிடெக்னிக் மாணவியருக்கு பாராட்டு


ADDED : ஜன 17, 2025 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2025 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை: குடியாத்தத்தில், கடந்த, 7ல் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையிலான, வேலுார் மண்டல அளவில் பெண்களுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டி நடந்தது. இதில், ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவியர் தடகள போட்டியில் வெற்றி பெற்று, 'சாம்பியன்' பட்டம் பெற்றனர். சதுரங்கம் மற்றும் பூப்பந்து போட்டியில் முதலிடம், வாலிபால் மற்றும் கோ--கோ போட்டியில், 2ம் இடம், கபடி மற்றும் இறகுபந்து போட்டியில், 3ம் இடம் பெற்றனர்.

தடகள போட்டியில் மாணவி சுசித்ரா, 100 மீ., ஓட்டம், ஈட்டி எறிதலில் முதலிடம், கவிபாரதி உயரம் தாண்டுதலில் முதலிடம், 100 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம், ரோஜா வட்டு எறிதலில் முதலிடம், ரீனா குண்டு எறிதலில் முதலிடம், வளர்மதி குண்டு எறிதலில், 2ம் இடம், வட்டு எறிதலில், 4ம் இடம், ருக்மணி 800 மீ., ஓட்டத்தில் முதலிடம், 400 மீ., ஓட்டத்தில், 2ம் இடம், ஹமதாரனி ஈட்டி எறிதலில், 2ம் இடம் பெற்று, 'ஒட்டுமொத்த சாம்பியன்' பட்டம் பெற்று சாதனை படைத்தனர்.

குழு போட்டியில் முதலிடமும், தடகள போட்டியில் முதல் இரண்டு இடங்களையும் பெற்ற மாணவியர், மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். அவர்களை, கல்லுாரி முதல்வர் விஜயன், உடற்கல்வி இயக்குனர் விநாயகமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us