/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க.,வில் நீக்கப்பட்ட நிர்வாகி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க.,வில் நீக்கப்பட்ட நிர்வாகி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
தி.மு.க.,வில் நீக்கப்பட்ட நிர்வாகி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
தி.மு.க.,வில் நீக்கப்பட்ட நிர்வாகி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 23, 2025 01:37 AM
தி.மு.க.,வில் நீக்கப்பட்ட நிர்வாகி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
காரிமங்கலம், :தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளரை கண்டித்து, கட்சியில் இருந்து, நீக்கப்பட்ட ஒன்றிய செயலாளரின் ஆதரவாளர்கள் காரிமங்கலத்திலுள்ள, தி.மு.க., கட்சி அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம், தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளராக இருந்த கிருஷ்ணன் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக, நேற்று முன்தினம் அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
ஒன்றிய செயலாளர் கிருஷ்ணனை கட்சியிலிருந்து நீக்கியதை கண்டித்து எர்ரசீகலஹள்ளி, கும்பாரஹள்ளி, திண்டல், பொம்மஹள்ளி, முக்குளம், நாகனம்பட்டி, மொட்டலுார் ஆகிய பகுதிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட, தி.மு.க.,வினர், தர்மபுரி மேற்கு மாவட்ட
செயலாளர் பழனியப்பனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.