தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வாகன ஓட்டியை விரட்டிய ஒற்றை யானை

வாகன ஓட்டியை விரட்டிய ஒற்றை யானை

வாகன ஓட்டியை விரட்டிய ஒற்றை யானை


ADDED : ஜன 23, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2025 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாகன ஓட்டியை விரட்டிய ஒற்றை யானை

ஓசூர், :கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட தாவரக்கரை, நொகனுார், கஸ்பா, ஆலஹள்ளி, முள்பிளாட் வனப்பகுதிகளில் மொத்தம், 10 க்கும் மேற்பட்ட யானைகள் பல குழுக்களாக முகாமிட்டுள்ளன. இதில், அஞ்செட்டி சாலை மற்றும் கிராமப்புற சாலையோரங்களில் சுற்றித்திரியும் ஒற்றை யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சத்தில்

உள்ளனர். நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, கண்டகானப்பள்ளியை சேர்ந்த முனிராஜ், 52, என்பவர் தேன்கனிக்கோட்டை - பாலதொட்டனப்பள்ளி சாலையில் பைக்கில் சென்றார். தின்னுார் ஏரி அருகே, அங்கிருந்த ஒற்றை யானை விரட்டிய நிலையில், அவர் பைக்கில் இருந்து விழுந்தார். பின்னர் சுதாரித்து மீண்டும் பைக்கில் கண்டகானப்பள்ளி கிராமத்திற்கு வேகமாக வந்து உயிர்

தப்பினார். ஒற்றை யானை முள்பிளாட் வனப்பகுதிக்கு சென்றது. இதுபோன்ற ஒற்றை யானைகளால், மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்தால், அவற்றை அடர்ந்த வனப்பகுதி

அல்லது கர்நாடகா வனப்பகுதிக்கு விரட்ட, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us