ADDED : பிப் 02, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாணவி உட்பட இருவர் மாயம்
ஓசூர் :ஓசூரை சேர்ந்தவர், 17 வயது சிறுவன்; அரசு ஐ.டி.ஐ.,யில் முதலாமாண்டு படிக்கிறார்; கடந்த, 30 காலை, 7:30 மணிக்கு, வீட்டிலிருந்து ஐ.டி.ஐ.,க்கு புறப்பட்டு சென்றவர் மாயமானார். அவரது தந்தை புகார் படி மத்திகிரி போலீசார் தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே தட்டசந்திரத்தை சேர்ந்தவர் மாரேகவுண்டர் மகள் பவித்ரா, 19. தர்மபுரி மாவட்டத்தில், தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., 2ம் ஆண்டு படிக்கிறார்; கடந்த மாதம், 30 அதிகாலை, 5:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார். அவரது தந்தை தேன்கனிக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரில், பாலக்கோடு அருகே ஜித்தாண்டஹள்ளியை சேர்ந்த டிரைவர் தமிழரசன், 25, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.