/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., கூட்டம்
/
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., கூட்டம்
ADDED : பிப் 02, 2025 01:19 AM
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., கூட்டம்
கிருஷ்ணகிரி, :காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல் நேற்று சாதாரண கூட்டம் நடந்தது. டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில், கடந்த ஜன., 7ல் உடல்நலக்குறைவால் உயிரிழந்த, 7வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் நித்யாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,க்கு செயல் அலுவலர் மாற்றத்திற்கு பின், புதியவர் நியமிக்கப்படவில்லை. ஊத்தங்கரை டவுன் பஞ்., செயலர் கூடுதல் பொறுப்பு வகிப்பதால் பணிகளை விரைந்து முடிக்க முடியவில்லை. டவுன் பஞ்.,க்கு செயல் அலுவலரை நியமிக்க கோருவது, அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்வது, பழுதடைந்த சாக்கடை கால்வாய்களை சீரமைப்பது, என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.