/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா
/
ஓசூரில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா
ADDED : பிப் 08, 2025 12:43 AM
ஓசூரில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா
ஓசூர் : ஓசூர், 37வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.பி.எம்., காலனி அங்கன்வாடி மையத்தில், 25 குழந்தைகள் ஆரம்ப கல்வி கற்று வருகின்றனர். ஓசூர் மாநகராட்சி பொது நிதியில் இருந்து, 13 லட்சம் ரூபாய் மதிப்பில், டி.வி.எஸ்., நகர் எதிரே, அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா தலைமை வகித்தார். ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
தொடர்ந்து மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், தி.மு.க., பகுதி செயலாளர் திம்மராஜ், ஐ.என்.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் முனிராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
அங்கன்வாடி மையம் அருகே, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும், நகர்புற சுகாதார நிலைய கட்டுமான பணிகளை, எம்.எல்.ஏ., பிரகாஷ் பார்வையிட்டார். அதேபோல், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஓசூரில் இருந்து ஜீமங்கலம், கனிமங்கலம், வெங்கடாபுரம் வழியாக பாகலுார் வரை, புதிய அரசு டவுன் பஸ் சேவையை, எம்.எல்.ஏ., பிரகாஷ் கொடி
யசைத்து துவக்கி வைத்தார்.