தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓடிய லாரியில் மாரடைப்பால் டிரைவர் பலி

ஓடிய லாரியில் மாரடைப்பால் டிரைவர் பலி

ஓடிய லாரியில் மாரடைப்பால் டிரைவர் பலி


ADDED : பிப் 09, 2025 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2025 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓடிய லாரியில் மாரடைப்பால் டிரைவர் பலி

ஓசூர்,:மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து, கேரள மாநிலம் கொச்சி நோக்கி, உணவு பொருட்களை ஏற்றிய குளிர்சாதன கன்டெய்னர் லாரி நேற்று சென்றது. ஓசூரிலுள்ள பாகலுார் சாலையில் மூவேந்தர் நகரில், மேடான பகுதியில் நேற்று மாலை, 4:15 மணிக்கு லாரி சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பின்நோக்கி வந்தது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். சாலையோரம் நின்றிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சாலையோர கடைகள் முன் நிறுத்தியிருந்த, 5 டூவீலர் மீது மோதிய லாரி, அங்கு குவித்து வைத்திருந்த மண் மீது ஏறி நின்றது. லாரியில் அமர்ந்த நிலையில் டிரைவர் இறந்து கிடந்தார். ஹட்கோ போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர். இதில், லாரி ‍டிரைவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இஸ்ரார் அகமது, 39, என்பதும், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us