/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜல்லிக்கட்டு மாட்டை விற்றதால் சிறுவன் தற்கொலை
/
ஜல்லிக்கட்டு மாட்டை விற்றதால் சிறுவன் தற்கொலை
ADDED : பிப் 09, 2025 01:06 AM
ஜல்லிக்கட்டு மாட்டை விற்றதால் சிறுவன் தற்கொலை
ஓசூர்:சூளகிரி அருகே, போகிபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 40. கெலமங்கலம் துளசி நகரில் தங்கி, போலீஸ் ஸ்டேஷன் எதிரே பேக்கரி கடை நடத்தி வருகிறார்; இவரது மூத்த மகன் பெருமாள், 16, அவருடன் வேலை செய்து வந்தார்; மகேந்திரன் வீட்டில் ஜல்லிக்கட்டு மாடு வளர்த்து வந்தார். பக்கத்து ஊர்களில் நடக்கும் எருது விடும் விழாவிற்கு அதை அழைத்து செல்வது வழக்கம். மாட்டிற்கு வயதாகி விட்டதால், கடந்த பொங்கல் பண்டிகையின் போது மாட்டை, மகேந்திரன் விற்று விட்டார்.
அதனால் வேறு ஜல்லிக்கட்டு மாடு வாங்க, தந்தையிடம் பெருமாள் கேட்டு வந்தார். மே மாதத்திற்கு பின் வாங்கலாம் என, மகேந்திரன் கூறியிருந்த நிலையில், கடந்த, 6 காலை அவர் பேக்கரிக்கு சென்று விட்டார். பெருமாள் பேக்கரிக்கு செல்லாத நிலையில், யு புரத்தில் நடந்த எருது விடும் விழாவை பார்க்க சென்றிருப்பான் என, மகேந்திரன் நினைத்து கொண்டார்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு மாடு இல்லையே என்ற ஏக்கத்தில், அப்பகுதியிலுள்ள மாட்டு கொட்டகையில், சிறுவன் பெருமாள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

