/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தந்தை கண்ணெதிரேவிபத்தில் மகன் பலி
/
தந்தை கண்ணெதிரேவிபத்தில் மகன் பலி
ADDED : பிப் 27, 2025 02:02 AM
தந்தை கண்ணெதிரேவிபத்தில் மகன் பலி
ஓசூர்:கிருஷ்ணகிரி அருகே கத்திரிப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணன், 42. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்; இவரது, 4 வயது மகன் உதயதர்சன். நேற்று முன்தினம் தன் டி.வி.எஸ்., ஸ்போர்ட் பைக்கில் ஹெல்மெட் அணிந்து, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மகனுடன் சென்றார். ஒட்டையனுார் அருகே மதியம், 1:20 மணிக்கு, முன்னால் சென்ற லாரியை ஒட்டி சென்றுள்ளார்.
அப்போது, பர்கூர் அருகே, லாரி டிரைவர் மோகன், எந்த சிக்னலும் செய்யாமல் திடீரென லாரியை நிறுத்தினார். அதனால், லாரியின் பின்னால் சென்ற நாராயணனின் பைக் மோதியது. இதில், மகன் உதயதர்சன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானான். காயமடைந்த நாராயணன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

