/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கலைத்திருவிழா போட்டி; வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
கலைத்திருவிழா போட்டி; வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
கலைத்திருவிழா போட்டி; வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
கலைத்திருவிழா போட்டி; வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மார் 02, 2025 01:22 AM
கலைத்திருவிழா போட்டி; வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியருக்கு நடந்த கலைத்திருவிழா போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் தினேஷ்குமார் பாராட்டு தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில், 35 பள்ளி விடுதிகள், 12 கல்லுாரி விடுதிகள் உள்ளன. இங்கு தங்கி பயிலும் மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் 'கலைத்திருவிழா' என்ற பெயரில் கடந்த 28ல், நடந்தது. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கட்டுரை, பேச்சு போட்டிகளில், 60 மாணவ, மாணவியர் வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கும் விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில், ஒவ்வொரு போட்டிக்கும் முறையே முதல் பரிசு, 2ம் பரிசு மற்றும் 3-ம் பரிசுக்கான கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வழங்கி பாராட்டினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பத்மலதா மற்றும் விடுதி காப்பாளர்கள்
கலந்து கொண்டனர்.