/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டில்லியில் போராடும் விவசாயிகளுக்குஆதரவாக கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்

ADDED : மார் 06, 2025 01:17 AM
டில்லியில் போராடும் விவசாயிகளுக்குஆதரவாக கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:டில்லியில் உண்ணாவிரதமிருந்து போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமை வகித்து பேசியதாவது:பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் டில்லியில் வட இந்திய விவசாயிகள் சங்க தலைவர் டெல்லேவால், 100வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். எனவே, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்.
அங்கீகார கமிட்டியின் மூலம் விவசாய விலைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச நிரந்தர விலையை நிர்ணயிக்க வேண்டும். வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்து, இறக்குமதிக்கு தடைவிதிக்க வேண்டும். உலக நாடுகளில் நிலவும் உணவு பற்றாக்
குறையை போக்க இந்திய உபரி உணவு பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வாணிஒட்டு திட்டத்தை தேர்தல் வாக்குறுதி படி உடனே நிறைவேற்ற வேண்டும். தேசிய நெடுஞ்சாலையிலுள்ள டோல்கேட்களில் விவசாயிகளின் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.