ADDED : மார் 07, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
கிருஷ்ணகிரி,:தளி அருகே, தேன்கனிக்கோட்டை சாலையில், தளி போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த டாடா சுமோவை நிறுத்தி சோதனையிட்டதில், 50 கிலோ அளவிலான, 20 மூட்டைகளில், ஒரு டன் ரேஷன் அரிசி, கர்நாடகாவிற்கு கடத்த முயன்றது தெரிந்தது.காரை ஓட்டி வந்த தேன்கனிக்கோட்டை ஆசாத் நகரை சேர்ந்த நிஜாம், 33 என்பவரை போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசியுடன் காரை பறிமுதல் செய்தனர்.