/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கொட்டப்படும் கட்டட கழிவுகளால்சுருங்கி வரும் சின்னஏரி பரப்பளவு
/
கொட்டப்படும் கட்டட கழிவுகளால்சுருங்கி வரும் சின்னஏரி பரப்பளவு
கொட்டப்படும் கட்டட கழிவுகளால்சுருங்கி வரும் சின்னஏரி பரப்பளவு
கொட்டப்படும் கட்டட கழிவுகளால்சுருங்கி வரும் சின்னஏரி பரப்பளவு
ADDED : மார் 07, 2025 02:20 AM
கொட்டப்படும் கட்டட கழிவுகளால்சுருங்கி வரும் சின்னஏரி பரப்பளவு
கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சின்ன ஏரிக்கு, கிருஷ்ணகிரி மலையில் இருந்து மழைக்காலங்களில் நீர்வரத்து இருக்கும். ஏரியில் தேங்கும் நீர், பழையபேட்டை பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளின் ஆழ்துளை கிணறுகளுக்கும், சோமேஸ்வரர் கோவில் எதிரிலுள்ள பெரிய கிணறு மற்றும் திருநீலகண்டர் தெருவிலுள்ள கிணறுக்கும் நீர் ஆதாரமாக உள்ளது. சின்னஏரியில் சாக்கடை கழிவுநீர் நேரடியாக கலப்பதால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, தண்ணீர் முற்றிலும் மாசடைந்துள்ளது. தற்போது, கட்டடக்கழிவுகளை ஏரிக்கரையில் கொட்டி வருவதால், ஏரி பரப்பளவு குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'நீர்நிலைகளை பாதுகாக்க, நீதிமன்றம் உத்தரவிட்டும், 20 ஏக்கர் பரப்பளவில் இருந்த சின்னஏரி, ஆக்கிரமிப்புகளால், 16 ஏக்கராக குறைந்துள்ளது. ஏரிக்கரையில் கட்டட கழிவுகள் மற்றும் கோழிக்கழிவுகளை கொட்டி வருவதால், 15 முதல், 20 அடி வரை ஏரியின் பரப்பளவு குறைந்துள்ளது. இதை நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. இதனால், நாளடைவில் இந்த ஏரி குட்டையாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏரியில் குப்பை மற்றும் கட்டடக்கழிவுகளை கொட்டு வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.