ADDED : மார் 14, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாளை இலவச கண் சிகிச்சை முகாம்
அரூர்:அரூர்- அடுத்த தீர்த்தமலையிலுள்ள வனச்சரக அலுவலக வளாகத்தில், நாளை காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணி வரை பொது மருத்துவம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு, தீர்த்தமலை வனச்சரகம் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடக்கும் முகாமில், இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை, கண்புரை உள்ளவர்களுக்கு இலவசமாக அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். போக்குவரத்து, உணவு, தங்குமிடம், சொட்டு மருந்து அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.