/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குழந்தை, சிறுமிக்கு புற்றுநோய் சிகிச்சைமருத்துவ குழுவினருக்கு பாராட்டு

ADDED : மார் 20, 2025 01:23 AM
குழந்தை, சிறுமிக்கு புற்றுநோய் சிகிச்சைமருத்துவ குழுவினருக்கு பாராட்டு
ஓசூர்:ஓசூர், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட, 22 மாத பெண் குழந்தைக்கு, இதயத்திற்கு மிக அருகில் புற்றுநோய் கட்டி கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றுவது சிக்கலான விஷயம் என்பதை அறிந்திருந்த குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை மருத்துவ குழுவினர், கீமோ தெரபி கொடுப்பது என முடிவெடுத்தனர். ஆனால், கை, கால் நரம்பு வழியாக புற்றுநோய்க்கான கீமோ தெரபி சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் வரலாம் என்பதால், மார்பு பகுதியின் தோலுக்கு அடியில், கீமோ உபகரணம் பொருத்தி பல மாதங்கள் தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நான்கு கட்ட கீமோ தெரபி சிகிச்சைக்கு பின், கட்டியின் அளவை கண்டறிந்து, அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், 16 வயது சிறுமி ஒருவர், ஒன்றரை மாதமாக தீராத காய்ச்சலால், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகமாக காணப்பட்டதுடன், கல்லீரல், மண்ணீரல் வீங்கியிருப்பதும், ரத்த புற்றுநோய் இருப்பதும் தெரிந்தது. அவருக்கு தொடர் சிகிச்சை மூலம், வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை சரியாக அளவிற்கு வந்து, கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறைந்தது. மருத்துவ சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் பூர்ணிமா, அரவிந்த் ஆகியோரை, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செயலாளர் லாசியா தம்பிதுரை நேற்று பாராட்டினார். கல்லுாரி டீன் ராஜாமுத்தையா, மருத்துவ கண்காணிப்பாளர் கிரீஸ் ஓங்கள் உடனிருந்தனர்.