/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர்உற்சவர் சன்னதியில் புனரமைப்பு பணி

ADDED : மார் 20, 2025 01:25 AM
மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர்உற்சவர் சன்னதியில் புனரமைப்பு பணி
ஓசூர்:ஓசூர், மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உற்சவர் சன்னதி புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலின் இடதுபுறத்தில், ராஜ கணபதி சன்னதி அருகே, உற்சவ மூர்த்திக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியின் கதவுகள் இரும்பு கம்பியால் அமைக்கப்பட்டிருந்தன. சன்னதியின் இருபுறங்களில் இரும்பு கம்பி ஜன்னல்கள் இருந்தன. அதனால், மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் உற்சவர் சன்னதி, தனி மண்டபத்தில் இருப்பது போல் காட்சியளிக்கவில்லை.
இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெற்று, டி.வி.எஸ்., நிறுவனம் உதவியுடன், உற்சவர் சன்னதியை புனரமைப்பு செய்யும் பணி நடக்கிறது. சன்னதியின் முன் இருந்த இரும்பு கம்பியால் ஆன கதவு அகற்றப்பட்டு, மரக்கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இருபுறம் இருந்த இரும்பு கம்பி ஜன்னல்கள் மூடப்பட்டுள்ளன. அதனால், உற்சவர் சன்னதி அழகாக தயாராகி வருகிறது.