/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்ட சுற்றுச்சூழல் கண்காட்சிநாச்சிகுப்பம் பள்ளிக்கு முதல் ப
/
மாவட்ட சுற்றுச்சூழல் கண்காட்சிநாச்சிகுப்பம் பள்ளிக்கு முதல் ப
மாவட்ட சுற்றுச்சூழல் கண்காட்சிநாச்சிகுப்பம் பள்ளிக்கு முதல் ப
மாவட்ட சுற்றுச்சூழல் கண்காட்சிநாச்சிகுப்பம் பள்ளிக்கு முதல் ப
ADDED : மார் 20, 2025 01:25 AM
மாவட்ட சுற்றுச்சூழல் கண்காட்சிநாச்சிகுப்பம் பள்ளிக்கு முதல் பரிசு
கிருஷ்ணகிரி:மத்திய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை உதவியுடன், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் சென்னை காலநிலை மாற்றத்துறை, மாவட்ட தேசிய பசுமைப்படை மற்றும் லா தொண்டு நிறுவனம் இணைந்து, பள்ளி மாணவ, மாணவியர் படைப்புகளை கொண்டு, மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் கண்காட்சியை, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடத்தினர்.
இதில், மாவட்டத்திலுள்ள, 60 பள்ளிகள் பங்கேற்றன. தினை போன்ற ஆரோக்கிய உணவுகள், ஆற்றல் சேமிப்பு அளவீடுகள், தோட்டம் அமைத்தல், நீர் பாதுகாப்பு, பசுமை வாழ்க்கை முறை, மாசுபாடுகளை களைதல் போன்ற கருத்துகளை மையப்படுத்தி மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். சிறந்த படைப்புகளை காட்சிப்படுத்திய நாச்சிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு முதல் பரிசாக, 10,000 ரூபாய், மாரிசெட்டிஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, 2ம் பரிசாக, 8,000 ரூபாய், சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, 3ம் பரிசாக, 7,000 ரூபாய், சிறப்பு பரிசுகளாக, 2 பள்ளிகளுக்கு, 5,000 ரூபாய் வழங்கப்பட்டன.
மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தீர்த்திகிரி, வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். வட்டாரக் கல்வி அலுவலர் பாபு, தலைமை ஆசிரியர் மகேந்திரன், ஓசூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, பசுமைத் தோழி நட்டார் கனி உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வேங்கடேசன் செய்திருந்தார்.