தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நீர்வரத்து குறைவால் சரியும் கே.ஆர்.பி., அணை நீர்மட்டம்

நீர்வரத்து குறைவால் சரியும் கே.ஆர்.பி., அணை நீர்மட்டம்

நீர்வரத்து குறைவால் சரியும் கே.ஆர்.பி., அணை நீர்மட்டம்


ADDED : மார் 21, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நீர்வரத்து குறைவால் சரியும் கே.ஆர்.பி., அணை நீர்மட்டம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையாலும் நீர்வரத்து உள்ளது. அணை கட்டி, 64 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த, 2020 மே, 1ல் முதல் முறையாக அணைக்கு நீர்வரத்தின்றி வறண்டது. பின்னர் நீர்வரத்து துவங்கினாலும், அணை மொத்த உயரமான, 52 அடியில், 50 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேங்கி வைக்கப்படுகிறது. கடந்தாண்டு அக்., 9ல் அணை நீர்மட்டம், 50 அடியை எட்டியது. அன்றிலிருந்து அணைக்கு தொடர்ந்து சீரான நீர்வரத்து இருந்ததால், கடந்த, 8 வரை, 150 நாட்களாக அணையில், 50 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

கடந்த, 10ல் இந்த ஆண்டில் முதல் முறையாக அணைக்கு நீர்வரத்து பூஜ்ஜியமானது. பின்னர் பெய்த மழையால், 4 நாட்களுக்கு பிறகு, நீர்வரத்து மீண்டும் துவங்கியது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து, 114 கன அடியாக இருந்த நிலையில், நேற்று, 52 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து இடது மற்றும் வலதுபுற கால்வாயில் பாசனத்திற்காக, 171 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் கடந்த, 8ல், 50 அடியாக இருந்த நிலையில், மழையின்றி, கடும் வெயிலால் நீர்வரத்து குறைந்து நேற்று, 48.85 அடியாக நீர்மட்டம் சரிந்தது.

மழை பெய்தால் மட்டுமே அணை நீர்மட்டம் உயரும் என்பதால், கோடைக்கு முன்பே நீர் இருப்பு குறைந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், அணையில் தேங்கியுள்ள தண்ணீர் முழுவதும், பச்சை நிறமாக மாறி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us