/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரிநாட்டு நலப்பணி திட்ட முகா
/
அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரிநாட்டு நலப்பணி திட்ட முகா
அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரிநாட்டு நலப்பணி திட்ட முகா
அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரிநாட்டு நலப்பணி திட்ட முகா
ADDED : மார் 27, 2025 01:24 AM
அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரிநாட்டு நலப்பணி திட்ட முகாம்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம், தளி அருகே மதகொண்டப்பள்ளியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜரத்தினம் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார்.
சி.எம்.சி.ஏ., திட்ட அலுவலர் மாதப்பன், உதவி மேலாளர் டேவிட் பாக்கியசுந்தரம், திட்ட ஒருங்கிணைப்பாளர் பவானி ரமேஷ், என்.எஸ்.எஸ்., திட்ட அதிகாரி தினேஷ் பாபு ஆகியோர், முகாமின் நோக்கம் மற்றும் சமூக பொறுப்பை வளர்ப்பதில் என்.எஸ்.எஸ்., திட்டத்தின் பங்கு குறித்து பேசினர். முகாமில், பாஸ்கர் என்பவர், திட மற்றும் ஈர மக்கும் கழிவு மேலாண்மை குறித்து விளக்கமளித்தார்.
மேலும், மாணவர்களுக்கு கழிவுகளை பிரித்தல், மறு சுழற்சி செய்தல், உரமாக்குதல், பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். மதகொண்டப்பள்ளி கிராமத்தில், மாணவ, மாணவியர் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன.