/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குப்பை அகற்றப்பட்டு சாலையோரங்கள்துாய்மையானதால் வாகன ஓட்டிகள் நிம்மதி

ADDED : மார் 27, 2025 01:25 AM
குப்பை அகற்றப்பட்டு சாலையோரங்கள்துாய்மையானதால் வாகன ஓட்டிகள் நிம்மதி
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, பெத்ததாளாப்பள்ளி பஞ்., தின்னக்கழனி அருகே, ராயக்கோட்டை சாலையோரம் ஏராளமானோர், கோழிக் கழிவுகள், குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை மூட்டை மூட்டையாக வீசி வந்தனர். இந்த குப்பைக்கு பஞ்., துாய்மை பணி ஒப்பந்த ஊழியர்கள் தீ வைத்து விடுவதால், கடும் புகை மூட்டம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இங்கு கொட்டப்படும் குப்பையால், நீர்நிலை மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்த செய்தி, 'காலைக்கதிர்' நாளிதழில் வெளியானது.
இதையடுத்து, கிருஷ்ணகிரி பி.டி.ஓ., மற்றும் தனி அலுவலர்கள் அங்கு நேரில் ஆய்வு செய்து, அங்கு கொட்டி வைத்திருந்த குப்பையை அகற்றினர். பின்னர், இங்கு குப்பை கொட்டாதீர்கள், மீறி குப்பை கொட்டுபவர்கள் மீது, பஞ்., சட்டம், 1994ன் படி சுகாதார சீர்கேடு செய்வோருக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப் படுவதாகவும், அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
***************************