/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., சார்பில் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
தி.மு.க., சார்பில் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தி.மு.க., சார்பில் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தி.மு.க., சார்பில் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : மார் 30, 2025 01:22 AM
தி.மு.க., சார்பில் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, சந்தைப்பேட்டையில் கிருஷ்ணகிரி, கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ரம்ஜான் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு நகர பொறுப்பாளர் அஸ்லம் வரவேற்றார்.
சுன்னத் ஜமாத் தலைவர் கவுஸ் ஷெரீப் முன்னிலை வகித்தார். மாவட்ட அரசு தலைமை ஹாஜி கலீல் அகமது, 200 உலமாக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
மொத்தம், 1,800 பேருக்கு, 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரம்ஜான் நலத்திட்ட உதவிகளை வழங்கி, தி.மு.க.,வின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
அதிகாலை நோன்பு திறந்தபின் பசியோடு நோன்பிருந்து, மாலையில் நோன்பு திறக்கும் இஸ்லாமியர்களுக்காக இன்று மளிகை பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரம்ஜானை நீங்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும். இஸ்லாமியர்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பது தி.மு.க., தான். இஸ்லாமியர்களை ஒடுக்க நினைக்கும் பா.ஜ.,வோடு, அ.தி.மு.க., கூட்டணி வைப்பதற்காக காலில் விழுந்து கிடப்பது வெட்ககேடு. இவ்வாறு அவர் பேசினார்.
சுன்னத் ஜமாத் செயலாளர் அஸ்லம், பொருளாளர் சனாவுல்லா, நகராட்சி கவுன்சிலர்கள் சிறுபான்மை மாவட்ட அமைப்பாளர் ஷாஜித், துணை அமைப்பாளர்கள் ரியாஸ், சித்திக் ஜெயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.