/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்த.மா.கா., சார்பில் கலெக்டரிடம் மனு
/
சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்த.மா.கா., சார்பில் கலெக்டரிடம் மனு
சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்த.மா.கா., சார்பில் கலெக்டரிடம் மனு
சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்த.மா.கா., சார்பில் கலெக்டரிடம் மனு
ADDED : மார் 30, 2025 01:23 AM
சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்த.மா.கா., சார்பில் கலெக்டரிடம் மனு
தர்மபுரி:பாலக்கோடு அருகேயுள்ள, சுங்கக் சாவடியை அகற்ற கோரி, கலெக்டர் அலுவலகத்தில், த.மா.கா., சார்பில், மாவட்ட தலைவர் புகழ் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வழியாக அமைக்கப்பட்டுள்ள புதிய தேசிய நெடுஞ்சாலையில் கர்த்தாரஹள்ளி அருகே சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. பாலக்கோடு சுற்று வட்டார பகுதி
விவசாய கிராமங்கள் நிறைந்தது. விவசாயிகள் காய்கறி, பூ, பழம் உள்ளிட்டவற்றை விளைவித்தும், பால் மற்றும் பால் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தினமும் அனுப்புவதன் மூலம், வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். இதுவரை மாநில நெடுஞ்சாலையாக இருந்த பாலக்கோடு சாலை தற்போது, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு சுங்கம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சுங்கச் சாவடியில் இருந்து, 60 கி.மீ.,க்கு அப்பால் தான் மற்றொரு சுங்கச் சாவடி அமைக்கப்பட
வேண்டும் என, மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் அரசிதழ் அறிவிப்பு தெரிவிக்கிறது. ஆனால், கர்த்தாரஹள்ளி சுங்கச் சாவடிக்கும், பாளையம் சுங்க சாவடிக்கும் இடைப்பட்ட தூரம், 28 கி.மீ., தான் உள்ளது. இவ்வாறு விதிமீறி அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்
சாவடியை அகற்ற வேண்டும்.