/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மல்லிகையில் மதிப்புக்கூட்டு பொருட்கள்தயாரிக்க வேளாண் மாணவியர் விளக்கம்

ADDED : ஏப் 01, 2025 01:31 AM
மல்லிகையில் மதிப்புக்கூட்டு பொருட்கள்தயாரிக்க வேளாண் மாணவியர் விளக்கம்
கிருஷ்ணகிரி:ஓசூர், அதியமான் வேளாண் கல்லுாரி மாணவியர், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் தங்கி, வேளாண் சார்ந்த பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள், காவேரிப்பட்டணம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த, மல்லிகை பூக்களை மதிப்பு கூட்டு பொருட்களாக உருவாக்குவது குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
மல்லிகை பூ எண்ணெய், அரோமாதெரபி, வடிவு பொருட்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் மருத்துவ பயன்களுக்கு அதிக தேவை உள்ளது. ஒரு லிட்டர் உயர்தர மல்லிகை எண்ணெய் சர்வதேச சந்தை மதிப்பு, 3 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை உள்ளது.
இதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளில் அதிக தேவை உள்ளது. மல்லிகை வாசனை திரவிய தொழிலுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, மல்லிகையை பூக்களாக மட்டும் விற்பனை செய்யாமல், மதிப்பு கூட்டு பொருட்களாக தயாரித்து, அதிக வருமானம் ஈட்டலாம்.
பிரான்ஸ், யு.எஸ்.ஏ., மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், மல்லிகை எண்ணெய்க்கு பெரும் வரவேற்பு உள்ளது. பெரும்பாலான அழகு சாதன நிறுவனங்கள், மல்லிகை பூக்களை அதிகம் வாங்கி வருகின்றனர் என, விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.