/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல்லுாரி மாணவர்கள் சென்ற கார்மின்கம்பத்தில் மோதி விபத்து
/
கல்லுாரி மாணவர்கள் சென்ற கார்மின்கம்பத்தில் மோதி விபத்து
கல்லுாரி மாணவர்கள் சென்ற கார்மின்கம்பத்தில் மோதி விபத்து
கல்லுாரி மாணவர்கள் சென்ற கார்மின்கம்பத்தில் மோதி விபத்து
ADDED : ஏப் 04, 2025 01:16 AM
கல்லுாரி மாணவர்கள் சென்ற கார்மின்கம்பத்தில் மோதி விபத்து
போச்சம்பள்ளி:போச்சம்பள்ளியிலிருந்து சந்துார் செல்லும் சாலை திருவயலுாரில், மாரியம்மன் கோவில் அருகே, ஹோண்டா சிட்டி கார் சாலையோர மின்கம்பத்தில் வேகமாக மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து சாலையில் விழுந்தது. மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியில் அரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போச்சம்பள்ளி போலீசார் விசாரித்ததில், திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த சாம்குமார், 19, என்பவர் காரை ஓட்டி வந்ததும், தர்மபுரியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.பார்ம், 2ம் ஆண்டு படித்து வந்ததும் தெரிந்தது.
இவரின் கல்லுாரி நண்பர்களான பார்த்தசாரதி, பூவரசன், சத்தியபிரகாஷ் உள்ளிட்ட, 4 பேரும் செல்லகுட்டப்பட்டி திரவுபதியம்மன் கோவிலில் சுவாமி கும்பிட்டு விட்டு, சக நண்பரான பூவரசனை, சந்துாரிலுள்ள அவரது வீட்டில் இறக்கி விட்டு வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், மின்கம்பத்தில் மோதியது தெரிய வந்தது. போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.