/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பேட்டராயசுவாமி கோவில் திருவிழாஅனைத்து துறை அலுவலர்கள் கூட்டம்
/
பேட்டராயசுவாமி கோவில் திருவிழாஅனைத்து துறை அலுவலர்கள் கூட்டம்
பேட்டராயசுவாமி கோவில் திருவிழாஅனைத்து துறை அலுவலர்கள் கூட்டம்
பேட்டராயசுவாமி கோவில் திருவிழாஅனைத்து துறை அலுவலர்கள் கூட்டம்
ADDED : ஏப் 04, 2025 01:16 AM
பேட்டராயசுவாமி கோவில் திருவிழாஅனைத்து துறை அலுவலர்கள் கூட்டம்
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவில் தேர்திருவிழா வரும், 10ல் நடக்கிறது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில், திருவிழா குறித்தும், முன்னேற்பாடு பணிகள் குறித்தும், அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
தேன்கனிக்கோட்டை தாசில்தார் கங்கை தலைமை வகித்து பேசியதாவது:பழமையான பேட்டராயசுவாமி தேர்திருவிழாவிற்கு கர்நாடக மாநிலம், ஆந்திர மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவர். ஆயிரக்கணக்கில் வரும் பக்தர்களுக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மின்சாரம், கழிவறை மற்றும் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக, போக்குவரத்து வசதிகளையும் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் சீனிவாசன், வேல்ராஜ், டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் மஞ்சுநாத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.