sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாவிற்கு உரிய விலை கிடைக்கமுத்தரப்பு கூட்டத்துக்கு கோரிக்கை

மாவிற்கு உரிய விலை கிடைக்கமுத்தரப்பு கூட்டத்துக்கு கோரிக்கை

மாவிற்கு உரிய விலை கிடைக்கமுத்தரப்பு கூட்டத்துக்கு கோரிக்கை


ADDED : ஏப் 10, 2025 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மாவிற்கு உரிய விலை கிடைக்கமுத்தரப்பு கூட்டத்துக்கு கோரிக்கை

கிருஷ்ணகிரி:தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி, கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்தாண்டு பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க, நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம். அதன்படி பாதிப்பு குறித்து புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் அது அரசுக்கு அனுப்பவில்லை. கடந்தாண்டு முத்தரப்பு கூட்டம் நடக்கவில்லை.

அதனால் மாவிற்கு உரிய விலை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. எனவே இந்தாண்டு மாவட்ட கலெக்டர் உடனே முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டி, மாவிற்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தளியில், 200 ஆண்டுகளாக விவசாயம் செய்வோருக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். தளியில் வனத்தையொட்டி வாழும் விவசாயிகள் அவர்களது பட்டா நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கக்கூடாது என நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் குடிநீருக்கு மக்கள் அவதிப்படுகின்றனர். மாவட்ட கலெக்டர் தலையிட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பட்டா நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க, வனத்துறையிடம் பேசி அனுமதி பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., மேகநாதன், பா.ம.க., மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராம், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணாமலை உள்பட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us