தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட பூஜை

அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட பூஜை

அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட பூஜை


ADDED : நவ 29, 2025 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெலமங்கலம், நவ. 29

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், தொட்டதிம்மனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட நெல்லுார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 171 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆனால் 4 வகுப்பறை கட்டடங்கள் மட்டுமே இருப்பதால், மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர். அதனால், கூடுதல் வகுப்பறை கட்டி தர வேண்டும் என, பள்ளி தலைமையாசிரியை பிரேமலதா, டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் லிமிடெட் (டீல்) நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தார். அதையேற்று, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம் அனுமதி பெற்று, டீல் நிறுவனம் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, 2 கூடுதல் வகுப்பறைகள் கட்ட, 40 லட்சம் ரூபாய் ஒதுக்கியது.

இப்பணியை, டீல் நிறுவனத்தின்

பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட தலைவர் பாஸ்கர், பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். தலைமையாசிரியை பிரேமலதா, டீல் நிறுவன குழு மேலாளர் முருகேஷ், மூத்த மேலாளர்கள் ஹரிஹரன், மாணிக்கம், தணிகைவேல், சமூக மேம்பாட்டு குழு உறுப்பினர் பூபதி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, சமூக பொறுப்புணர்வு திட்ட செயல் அதிகாரி பிரபு செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us