விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 24, 2026 05:25 AM

கிருஷ்ணகிரி:வி.பி.ஜி.,
ராம் ஜி திட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி தேசிய வேலை திட்டத்தை
மீண்டும் நிறைவேற்ற, மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி,
தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், நேற்று
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், பெருந்திரள் முறையீடு
ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கண்ணு தலைமை வகித்தார். துணை
செயலாளர் ராமமூர்த்தி, துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர்
சக்கரவர்த்தி, மாநில குழு உறுப்பினர் வெங்கடாசலம், விவசாயிகள்
சங்க மாவட்ட தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட
செயலாளர் சேகர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய
ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை மேலும் பலப்படுத்தி தொடர்ந்து
செயல்படுத்த வேண்டும். வி.பி.ஜி., ராம் ஜி என்ற புதிய சட்டத்தை
உடனடியாக திரும்ப பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை
உறுதியளிப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர் அனைவருக்கும்
ஆண்டுக்கு, 200 நாட்களாக வேலையை உயர்த்தி, நாள் ஒன்றுக்கு, 700 ரூபாய்
வழங்க வேண்டும். அனைத்து பேரூராட்சி, நகராட்சிகளுக்கு, 100 நாள் வேலை
திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன
கோஷங்களை எழுப்பினர்.
