/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் ஈஷா சார்பில் 1 கோடி மரக்கன்றுகள்நடுவது குறித்த கலந்தாலோசனை கூட்டம் ஓசூரில் ஈஷா சார்பில் 1 கோடி மரக்கன்றுகள்நடுவது குறித்த கலந்தாலோசனை கூட்டம்

ADDED : மார் 08, 2025 01:48 AM
ஓசூரில் ஈஷா சார்பில் 1 கோடி மரக்கன்றுகள்நடுவது குறித்த கலந்தாலோசனை கூட்டம்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் அடுத்த, 5 ஆண்டுகளில் ஈஷா யோகா மையம் சார்பில், 1 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம், 10 ம் தேதி முதற்கட்டமாக, 10 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான கலந்தாய்வு கூட்டம், ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. தம்பிதுரை எம்.பி., மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செயலாளர் லாசியா தம்பிதுரை, ஓசூர் காங்., முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், டி.வி.எஸ்., தொழிற்சங்க தலைவர் குப்புசாமி ஆகியோர், மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்குவது பற்றியும், பராமரிப்பது குறித்தும் பேசினர்.
மேலும், 25 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின் பொறுப்பு அலுவலர்கள் பங்கேற்று, இத்திட்டத்திற்கு உதவியாக இருப்பதாக தெரிவித்தனர். 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான பொறுப்பை ஏற்று கொள்வதாக, மேயர் சத்யா உறுதியளித்தார். தமிழ்நாடு முன்னோடி
விவசாயி தமிழ்மாறன், மரக்கன்றுகள் நடுவது பற்றியும், அதன் பராமரிப்பு குறித்தும் பேசினார். ஓசூர் மக்கள் சங்க தலைவர் பிரசாத், ஈஷா யோகா மைய ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன்
உட்பட பலர் பங்கேற்றனர்.