/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்2வது நாளில் 1,256 பேருக்கு தீர்வு
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்2வது நாளில் 1,256 பேருக்கு தீர்வு
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்2வது நாளில் 1,256 பேருக்கு தீர்வு
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்2வது நாளில் 1,256 பேருக்கு தீர்வு
ADDED : பிப் 14, 2025 01:11 AM
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்2வது நாளில் 1,256 பேருக்கு தீர்வு
கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று, 2ம் நாளாக, 'மக்களுடன் முதல்வர்' மூன்றாம் கட்ட திட்ட முகாமை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 'மக்களுடன் முதல்வர்' 3ம் கட்ட திட்ட முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இரண்டாம் நாளான நேற்று பாலேப்பள்ளி, கந்திகுப்பம், அஞ்சூர், அரசம்பட்டி, போச்சம்பள்ளி ஆகிய 5 இடங்களில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேற்று, 5 இடங்களில் நடந்த முகாமில் மனு அளித்தவர்களில், 1,256 பேருக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டது. அதேபோல, 1,243 பயனாளிகளுக்கு, 2.25 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. முன்னதாக கம்பம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கம்பம்பள்ளி, காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, 7.99 கோடி ரூபாய் மதிப்பில், 34 வகுப்பறைகள் கட்டுமான பணிக்கு பூமிபூஜை செய்து பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்.
அரசம்பட்டியில் நடந்த முகாமில், மனு அளிக்க அகரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் தமிழ்செல்வி, 50 என்பவர் வந்திருந்தார். அவர் திடீரென மயங்கி விழுந்தார். சரியான நேரத்திற்கு அமைச்சர் கணேசன் வந்தாலும், அவர் வருவதற்கு முன், நீண்ட நேரம் அமர்ந்திருந்ததால் மயங்கினார். அவரை அருகிலிருந்தவர்கள் அவசர அவசரமாக சக்கர நாற்காலியில் அமர வைத்து, ஆம்புலன்ஸ் மூலம், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

