/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கருப்பு கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பு5 வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

ADDED : மார் 08, 2025 01:45 AM
கருப்பு கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பு5 வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்
தளி:கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த பாலதொட்டனப்பள்ளி அருகே மேடுமுத்துக்கோட்டை கிராமத்தில் உள்ள முகமது மன்சூர் என்பவரது நிலத்தில், உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கருப்பு கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதாக, கக்கதாசம் வருவாய் ஆய்வாளர் பானுமதிக்கு தகவல் கிடைத்தது. அவரது தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், முகமது மன்சூர் நிலத்தில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
அப்போது, உரிய அனுமதி பெறாமல் நிலத்தில் இருந்து கருப்பு கிரானைட் கற்களை வெட்டி எடுப்பது தெரிந்தது. இதனால், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு டிப்பர் லாரி, 2 டிராக்டர், ஒரு ஹிட்டாச்சி வாகனம், ஒரு கம்ப்ரசர் வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.