/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டுமதுபானம் திருடிய 5 பேர் கைது
/
டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டுமதுபானம் திருடிய 5 பேர் கைது
டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டுமதுபானம் திருடிய 5 பேர் கைது
டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டுமதுபானம் திருடிய 5 பேர் கைது
ADDED : ஏப் 08, 2025 01:54 AM
டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டுமதுபானம் திருடிய 5 பேர் கைது
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த திம்மசந்திரம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தேன்கனிக்கோட்டையை சேர்ந்த மூர்த்தி, 47, விற்பனையாளராக உள்ளார். கடந்த, 1 நள்ளிரவு கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 1.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 16 பெட்டி மதுபானங்களை திருடி சென்றனர். தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
தேன்கனிக்கோட்டை அருகே சாப்ரானப்பள்ளியை சேர்ந்த சபரி, 25, வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே கூச்சனுார் சீனிவாச நகரை சேர்ந்த தீனா, 24, காந்தி கணவாய் பகுதியை சேர்ந்த ஹரிஸ், 33, கர்நாடகா மாநிலம், பல்லாரியை சேர்ந்த நாகராஜ், 24, ஆகியோர், பணம் திருடுவதற்காக டாஸ்மாக் கடைக்குள் புகுந்ததும், பணம் இல்லாததால் மதுபானங்களை திருடி சென்றதும் தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கடந்த, 4 மாதங்களுக்கு முன், கைதான தீனாவுடன் சேர்ந்து, சாப்ரானப்பள்ளியை சேர்ந்த சந்தோஷ், 20, என்பவர், இருதுக்கோட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானங்களை திருடியது தெரிந்தது. இதனால் சந்தோைஷயும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து மொத்தம், 12 பெட்டி மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.