/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையில் முகாமிட்ட ஒற்றை ஆண் யானை
/
சாலையில் முகாமிட்ட ஒற்றை ஆண் யானை
ADDED : ஆக 31, 2024 01:06 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதியில், யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளன. இதில் கூட்டத்தில் இருந்த பிரிந்த ஒற்றை ஆண் யானை, அய்யூர் சாமை ஏரி அருகே சாலையில் நீண்ட நேரமாக உலா வந்தது.
அப்போது அவ்வழியாக பெட்டமுகிலாளம் மற்றும் கொடகரை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனர். மொபைல்போனில் யானையை படம் பிடித்தனர். திடீரென
ஒற்றை யானை வாகனங்களை நோக்கி ஓடி வந்தது. இதனால் வாகனத்தில் இருந்தவர்கள் அலறியடித்தனர். சில அடி துாரம் ஓடி வந்த யானை, அதன் பின் வாகனத்தை துரத்தாமல் சாலையில் நின்ற நிலையில், பொதுமக்கள் சத்தம் போடவே, அங்கிருந்து யானை
காட்டிற்குள் சென்றது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். வாகன போக்குவரத்து சீரானது.