/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழகத்தில் தேங்காய் விலை 40 ஆண்டுகளில் இல்லாத உச்சம் ஹோலி பண்டிகை வரை நீடிக்கும்: வியாபாரிகள்

ADDED : பிப் 25, 2025 06:51 AM
தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத வகையில், தேங்காய் விலை உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 40 ஆண்டுகளில் தேங்காய் விலை இந்தளவிற்கு உச்சத்தை தொட்டதில்லை விவ-சாயிகள் கூறுகின்றனர்.காய்ப்புத்திறன் குறைந்துள்ளதால், 1,000 தேங்காய் வெட்டிய இடத்தில் தற்போது, 600 தேங்காய் மட்டுமே கிடைக்கிறது.பிற மாநிலங்களிலிருந்து வரத்து குறைந்ததால், தற்போது அதிக விலை கிடைக்கிறது. வட மாநிலங்களில் தேங்காய் தேவை அதிக-ரித்துள்ளதால், ஹோலி பண்டிகை வரை தேங்காய் விலை உயர்வு நீடிக்கும் என எதிர்பார்ப்பதாக விவசாயிகள் தெரிவித்த-னர்.வியாபாரிகள்கடந்த, 2024ல் கேரளா, ஆந்திரா மாநிலங்களில் தேங்காய் காய்ப்புத்திறன் 60 சதவீதம் குறைந்து போனதாலும்; வட மாநி-லங்களில் தற்போது நடக்கும் கும்பமேளா, மகா சிவராத்திரி, ஹோலி பண்டிகை போன்றவற்றின் தேவைக்காக, தமிழகத்திலி-ருந்து அதிகம் அனுப்பப்படுவதாலும், இங்கு சந்தைக்கு தேங்காய் வரத்து குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் விவசாயிகளிடம் ஒரு தேங்காய் 10 முதல் 12 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டது, தற்போது 20 முதல் 25 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.கடந்த ஜூலை வரை, ஒரு கிலோ தேங்காய் 21 ரூபாய் ஆக விற்பனை செய்யப்பட்டது, ஆகஸ்ட் முதல் 56 ரூபாய் வரை விற்-பனை ஆகிறது.பண்டிகைகள், விழாக்கள் நிறைவடைந்த பிறகே, தேங்காய் விலை ஓரளவு கட்டுக்குள் வரும்.இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
- நமது நிருபர் -