/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீடு புகுந்து நகை திருடிய 2 வாலிபர்களுக்கு 'காப்பு'
/
வீடு புகுந்து நகை திருடிய 2 வாலிபர்களுக்கு 'காப்பு'
வீடு புகுந்து நகை திருடிய 2 வாலிபர்களுக்கு 'காப்பு'
வீடு புகுந்து நகை திருடிய 2 வாலிபர்களுக்கு 'காப்பு'
ADDED : ஆக 08, 2024 05:45 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த பெட்டமுகிலாளம் அருகே, புதுார் ஜெயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் மனைவி அன்னக்-கிளி, 40, கூலித்தொழிலாளி; பாசிப்பள்ளியிலுள்ள ராஜப்பாவின் நிலத்தில் பணியாற்றி வந்தவர், அங்கிருந்த ஒரு வீட்டில் தங்கியி-ருந்தார்.
கடந்த, 5ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, வீட்டின் முன் துாங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், முக்கால் பவுன் நகையை திருடி சென்றனர். தேன்கனிக்-கோட்டை போலீசார் விசாரணையில், இருதுக்கோட்டை காலனி பகுதியை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் வினோத்குமார், 24, கூச்சுவாடியை சேர்ந்த டிரைவர் சந்தோஷ்குமார், 35, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும், நேற்று முன்-தினம் போலீசார் கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.