தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சி பெற வேண்டும்'

'தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சி பெற வேண்டும்'

'தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சி பெற வேண்டும்'


ADDED : ஆக 10, 2024 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 07:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:''தமிழ்ப் புதல்வன் திட்டத்தை மாணவர்கள் பயன்படுத்திக்-கொண்டு எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சி பெற வேண்டும்,'' என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.

அரசுப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, சமூக நலத்துறை சார்பில் மாதாந்திர உதவித் தொகை வழங்கும் வகையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை நேற்று கோவையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ்ப் புதல்வன் திட்டம் துவக்க நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ.,பாபு வரவேற்றார். மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் மதியழகன், பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில், 7,538 மாணவியரும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில், 54 கல்லூரிகளில் பயிலும், 6,27-0 மாணவர்களும் பயன்பெற உள்ளனர்.

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உயர்கல்வி படிக்கும் மாண-வியர் எண்ணிக்கை, 34 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை மாணவர்கள் பயன்படுத்தி தன்னம்-பிக்கையுடன் எண்ணங்களை வானளவுக்கு விரிவுபடுத்தி, சிறப்-பான எதிர்காலத்தை அமைத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்-களுக்கு, அதற்கான வங்கி அட்டையும், உயர்கல்வி பயிலும், 24 மாணவ, மாணவியருக்கு, 3.61 கோடி ரூபாய் கல்விக்கடன்

களையும் அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

மாவட்ட ஊராட்சி குழு

தலைவர் மணிமேகலை நாகராஜ், தர்மபுரி மாவட்ட மத்திய கூட்-டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மலர்விழி, மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயந்தி, பர்கூர் தாசில்தார் திருமுருகன், வங்கி அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

* தர்மபுரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, கல்லுாரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும், 'தமிழ் புதல்வன்' திட்டம் தொடக்க விழா, நேற்று மாலை பாப்பிரெட்-டிப்பட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார்.

எம்.பி., மணி முன்னிலை வகித்தார். மாவட்ட சமூக நல அலு-வலர் பவித்ரா வரவேற்றார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், ஏ.டி.எம்., கார்டு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''தர்மபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக, 7,033 மாணவர்கள் பயன்பெறு-கின்றனர். புதுமைப்பெண் திட்டத்தில், 10,740 மாணவியர் பயன்-பெற்று வருகின்றனர்,'' என்றார்.

டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கல்லுாரி மண்டல இணை இயக்குனர் சிந்தியா செல்வி, மாவட்ட செயலாளர்கள் பழனி-யப்பன், தடங்கம் சுப்பிரமணி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர்

சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து

கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us