sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ராணுவத்தில் பணி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

/

ராணுவத்தில் பணி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணுவத்தில் பணி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணுவத்தில் பணி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஜூலை 13, 2011 11:56 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: இந்திய ராணுவத்தில் பொறியாளர், ஆசிரியர் மற்றும் மிலிட்டரி பண்ணை நிர்வாகி ஆகிய அலுவலர்களாக பணிபுரிய தகுதியுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாவட்ட முன்னாள் ராணுவ வீரர் நல உதவி இயக்குனர் முத்துராம் வெளியிட்ட அறிக்கை: இந்திய ராணுவத்தில் அலுவலர்களாக பணிபுரிய துடிப்பும், துணிவும், ஆர்வமும் உள்ள ஆண், பெண் இருபாலரிடம் இருந்தும் பொறியாளர், ஆசிரியர் மற்றும் மிலிட்டரி பண்ணை நிர்வாகி ஆகிய பிரிவுகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், வொர்க்ஷாப் டெக்னாலஜி, சேட்டிலைட் கம்யூனிகேஷன், ஏரோஸ்பேஸ், ரப்பர் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், ஆர்கிடெக்சர், புட்- டெக்னாலஜி, பயோ-டெக்னாலஜி, கம்யூட்டர் சயின்ஸ், ஐடி ஆகிய பொறியியல் பட்டம் பெற்றவர்கள் பொறியியல் பிரிவுக்கும், எம்.ஏ., ஆங்கிலம், வணிகவியல், வரலாறு, இசை, புவியியல், பொலிடிக்கல் சயின்ஸ் ஆகிய ஏதேனும் ஒரு பாடத்திலும், எம்.எஸ்சி., கணிதம் அல்லது இயற்பியல் படித்து முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பிரிவுக்கும், பால்பண்ணை அல்லது வேளாண் பட்டதாரிகள் மிலிட்டரி பண்ணை நிர்வாகி பிரிவுக்கும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். நிரந்தர பணிக்காக விண்ணப்பிக்கும் திருமணமான அல்லது திருமணமாகாத ஆண்கள் 20 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். 1985 ஜனவரி 2ம் தேதிக்கும் 1992 ஜனவரி 1ம் தேதிக்கும் இடைபட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். குறுகிய கால பணிக்காக விண்ணப்பிக்கும் திருமணமான அல்லது திருமணமாகாத ஆண்களும், திருமணமாகாத பெண்களும், படைவீரர்களின் விதவையரும் 20 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். 1985 ஏப்ரல் 2ம் தேதிக்கும், 1992 ஏப்ரல் 1ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். பொறியியல் பிரிவுக்காக விண்ணப்பிப்பவர்கள், இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய தளத்தில் விண்ணப்பிக்க, ஜூலை 17ம் தேதி கடைசி நாள். இணையத்தளத்தின் மூலம் அனுப்பிய விண்ணப்பத்தை, பிரின்ட்அவுட் செய்து ஃபோட்டோ ஒட்டி சான்றொப்பமிடப்பட்டு உரிய இணைப்புகளுடன், 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும். இதர பிரிவுக்காக விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்ப படிவத்தை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம். பதிவிறக்கம் செய்து நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை, 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். விண்ணப்ப படிவம், விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி போன்ற விபரங்களை பெற கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகலாம். தகுதியினால் மட்டுமே பணியில் சேர முடியும் என்பதால், விண்ணப்பிப்பவர்கள் இடைதரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us