தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கோவிந்தராஜீலு சுவாமிக்கு திருக்கல்யாண பிரமோற்சவம்

கோவிந்தராஜீலு சுவாமிக்கு திருக்கல்யாண பிரமோற்சவம்

கோவிந்தராஜீலு சுவாமிக்கு திருக்கல்யாண பிரமோற்சவம்


ADDED : பிப் 26, 2024 02:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 02:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: பர்கூர் ஒன்றியம் சின்னமட்டாரப்பள்ளியிலுள்ள கோவிந்தராஜீலு சுவாமிக்கு, 52ம் ஆண்டு திருக்கல்யாண பிரமோற்சவ விழா கடந்த, 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 24ல் மதியம், 1:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.

பக்தர்கள் சீர்வரிசைகளை மேள தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, யாகம் வளர்த்து, திருக்கல்யாணம் நடந்தது. இதில், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர். இன்றிரவு, 7:00 மணிக்கு சேஷ வாகன உற்சவம், 26ல் இரவு, 7:00 மணிக்கு ஆஞ்சநேய வாகன உற்சவமும், 27 இரவு, 7:00 மணிக்கு யானை வாகன உற்சவம், இரவு, 11:00 மணிக்கு வானவேடிக்கை நடக்க உள்ளது. 28 காலை, 9:00 மணிக்கு வசந்த உற்சவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us