தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவில்களில் வழிபாடு

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவில்களில் வழிபாடு

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவில்களில் வழிபாடு


ADDED : மார் 04, 2024 10:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 10:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவர் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரகம் உள்ளிட்ட ஹோமங்களும், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.

இதில், ஏராளமான பெண்கள் பூசணியில் விளக்கேற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டையிலுள்ள தக்சண காலபைரவர் கோவில் மற்றும் கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us