ADDED : ஆக 24, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன், கந்திகுப்பம் தனியார் பள்ளியில் நடந்த பாலியல் குற்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க வேண்டி, நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயலாளர் ராஜேஸ்வரி, மாநில தலைவர் பழனியம்மாள், மாநில தணிக்கையாளர் நடராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், கந்திகுப்பம் அருகே தனியார் பள்ளியில் நடந்த என்.சி.சி., முகாமில், பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அனைத்து பள்ளிகளிலும் விசாரணை மேற்கொண்டு, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

