ADDED : ஜன 12, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி, பழையபேட்டையை சேர்ந்தவர் செல்வி, 44. இவர் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த, 9 தேதி இரவு, வீட்டில் மிக்ஸியில் சட்னி அரைத்து கொண்டிருந்த போது, அவரை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே செல்வி இறந்தார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.